நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி, 04.07.2025, வெள்ளிக்கிழமை அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், முப்பெரும்விழா நடைபெற இருக்கிறது. வேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம், BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு, தோழர் கோஷ செல்வம் பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழாவை நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மாநில செயலர் தோழர் B. மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கிளைகளில் இருந்து நமது தோழர்களை பெரும் அளவு அழைத்து வர முயற்சி செய்யவும். நாம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, CoC சார்பாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி தான் என்பதால், AIBDPA - TNTCWU சங்கத் தோழர்களையும், விழா அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் அழைத்து வரவும்.