ஊழியர்களின் அதி முக்கியமான கோரிக்கைகளை பற்றி விவாதிக்க ஒரு அதிகாரபூர்வ சந்திப்பு வழங்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், ஏற்கனவே DIRECTOR (HR)க்கு கடிதம் எழுதி உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருட்கள் என, ஊழியர்களுக்கு மொபைல் கருவிகள் வழங்குவது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பதவி உயர்வு கொள்கைகளில் உள்ள பாரபட்சங்களை நீக்குவது, பஞ்சாப் மாநில JTO இலாகா தேர்வு முடிவுகளை வெளியிடுவது, வெளிப்புற மருத்துவ சிகிச்சைக்கான உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்ட பிரச்சனைகளின் பட்டியலையும், BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே வழங்கி இருந்தது.
ஆனால், DIRECTOR (HR) சந்திப்பிற்கான தேதி எதையும், நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. 25.06.2025 அன்று, திருமிகு அனிதா ஜோஹ்ரி PGM (SR) அவர்களை சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, DIRECTOR (HR) உடனான அதிகாரபூர்வ சந்திப்பிற்கான தேதியை, விரைவில் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் காலதாமதம் இன்றி விரைவில் அந்தக் கூட்டத்தை நடத்த, PGM (SR) உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
