Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 26, 2025

எழுச்சியோடு நடைபெற்ற, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்!


BSNL நிறுவனம், TCS மூலம் வழங்கும் 4G சேவையில் உள்ள குறைபாடுகளை போக்க வலியுறுத்தி, மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில், நமது மாவட்டத்தில், கண்டன ஆர்ப்பாட்டம், CoC சார்பாக, 25.06.2025 அன்று, சேலம் GM அலுவலகத்தில், எழுச்சியோடு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU) M. மதியழகன் (AIBDPA) P. செல்வம் (TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பேற்றனர்.

போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA,  துவக்கவுரை வழங்கினார். தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, தோழர் B. சுதாகரன், மாவட்ட உதவி செயலர், AIBDPA ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU நிறைவுரை வழங்கினார். உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு, BSNLWWCC, மாநில குழு உறுப்பினர், தோழியர் D. கவிதா மற்றும் சேலம் மாவட்ட குழு கன்வீனர் தோழியர் C. லாவண்யா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

போராட்டத்தில், BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் R.  ராதாகிருஷ்ணன், மாவட்ட உதவி செயலர், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.

முன்னதாக, மாநில சங்க வழிகாட்டுதல் அடிப்படையில், நமது மாவட்டம் சார்பான பிரச்சனைகளை, தீர்வு காண வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கை மகஜர் வழங்கினோம். நிகழ்வில்,  நிர்வாக தரப்பில், DGM HQ., IFA., AGM HR உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மனுவை பெற்று கொண்டனர். நமது தரப்பில், BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தலைவர்கள் நிகழ்வில் பங்குபெற்றனர். இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், CoC சார்பாக, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
கன்வீனர், CoC






















நிர்வாகத்துடனான சந்திப்பு