Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, June 4, 2025

DIRECTOR (EB) அவர்களுடன், BSNLEU சந்திப்பு


BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர் 03.06.2025 அன்று, DIRECTOR (EB) திரு பாப்பா சுதாகர் ராவ் அவர்களை சந்தித்து, கீழ்க்கண்ட இரண்டு முக்கியமான விஷயங்களை விவாதித்தனர்.

1) BSNLன் டவர், ஃபைபர் மற்றும் DIGITAL சொத்துக்களை பணமாக்குவது:- 

BSNLன் டவர், ஃபைபர் மற்றும் DIGITAL ஆகியவற்றிலிருந்து அதிவேகமான பணமாக்கல் செய்யப்படும் என 27.05.2025 அன்று CMD BSNL எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை தொடர்பான விவரங்கள் தேவை என BSNL ஊழியர் சங்கம் கோரியது.  BSNLன் டவர், ஃபைபர் மற்றும் DIGITAL ஆகியவற்றை, பிறருக்கு வாடகைக்கு கொடுப்பதே, பணமாக்கல் என்பதை, DIRECTOR (EB) தெளிவு படுத்தினார்.  2024-25 என்கிற கடந்த நிதி ஆண்டில், இதன் மூலம் BSNL நிறுவனம், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது என்றும், அடுத்த நிதியாண்டில், இதில் 475 கோடி ரூபாய்கள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றும் DIRECTOR (EB) தெரிவித்தார்.

 2) வடகிழக்கு மாநிலங்களில் உள்ள OFC வழித்தடங்களில், அடிக்கடி ஏற்படும் பாதிப்பு:-  

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள OFC வழித்தடங்களில், அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதாக தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.  சமீபத்தில் நடைபெற்ற அசாம், NE-I மற்றும் NE-2 மாநிலங்களின் இணைந்த மாநாட்டில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, நிர்வாகம், விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  BSNLன் OFC வழித்தடங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, PGCIL உள்ளிட்ட இதர நிறுவனங்களிடம் இருந்து, 50,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆப்டிக் பைபர்களை, BSNL வாடகைக்கு எடுத்துள்ளதாக, DIRECTOR (EB) பதில் அளித்தார்.  வடகிழக்கு மாநிலங்களில் உள்ள, OFC வழித்தடங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU  மத்திய மாநில சங்கங்கள்