ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் திரு ராஜீவ் சோனி அவர்களை, BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர், தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச் செயலாளர், தோழர் P.அபிமன்யு ஆகியோர், 03.06.2025 அன்று சந்தித்து, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டம் தொடர்பாக விவாதித்தனர்.
DIRECTOR (HR)ஐ, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் விரைவில் சந்தித்த பின், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டம் நடைபெறும் என்று தலைவர் கூறினார்.
குறைந்த பட்சம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில், கூட்டத்தை நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர், தலைவரிடம் வலியுறுத்தினர். தலைவர், அதனை ஏற்றுக் கொண்டார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்