Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 5, 2025

BSNLEU அகில இந்திய மாநாட்டில் உரையாற்ற, CMD BSNLலுக்கு, அழைப்பு


04.06.2025 அன்று, திரு ராபர்ட் J. ரவி, CMD BSNLஐ சந்தித்த, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர், தோழர் P.அபிமன்யு,  கோவையில் நடைபெற உள்ள, BSNL ஊழியர் சங்கத்தின் 11ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு வர அழைப்பு விடுத்தார்.  அதற்கான அழைப்பிதழை, CMD BSNLக்கு, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழங்கினார்.  மாநாட்டில் பங்கேற்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக, CMD BSNL பதில் அளித்தார்.

விவாதத்தின் போது, ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்று, CMD BSNLக்கு தெரிவித்த பொதுச் செயலாளர், அதன் பின், ஊதிய மாற்ற பிரச்சனையை, DoTக்கு கொண்டு செல்ல ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேவையானவற்றை செய்வதாக, CMD BSNL உறுதி அளித்தார்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்