DIRECTOR (HR), மரு. கல்யாண் சாகர் நிப்பாணி அவர்களை, 04.06.2025 அன்று சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், அவரை, கோவையில் நடைபெற உள்ள, BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது அகில இந்திய மாநாட்டிற்கு வருகை தர அன்புடன் அழைத்தனர். BSNL ஊழியர் சங்கத்தின் அழைப்பிதழும் அவரிடம் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, ஊதிய மாற்ற உடன்பாட்டை இறுதி செய்ய, நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் ஏற்படுத்தும் அதீத கால தாமதம் தொடர்பாக, DIRECTOR (HR) அவர்களிடம், இரண்டு தலைவர்களும் தங்களது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்தனர். ஊதிய மாற்ற ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட, DIRECTOR (HR) அவர்களின் தலையீடு தேவை என்றும், கேட்டுக்கொண்டனர். இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட DIRECTOR (HR), இந்த பிரச்சனையில் தேவையானவற்றை செய்வதாக உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்