Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 19, 2025

BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு கடிதம்


"CONFIDENTIAL" அல்லது "SECRET" என்று குறிப்பிடப்படாத கடிதங்களை, அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு வழங்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த கோரிக்கையை, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம், தொடர்ந்து எழுப்பி வந்த காரணத்தால் கார்ப்பரேட் அலுவலகம், அந்த உத்தரவை வெளியிட்டு இருந்தது. ஆனால், கார்ப்பரேட் அலுவலகத்தில் எந்த ஒரு பிரிவும் இந்த உத்தரவை, தற்போது பின்பற்றுவதில்லை. 

சமீபத்தில், ஊழியர்களின் அலவன்சுகளை மாற்றுவது தொடர்பான ஒரு குழுவை, நிர்வாகம் அமைத்தது.  அந்த கடிதத்தின் நகலை சங்கத்திற்கு வழங்க PGM(Estt) மறுக்கிறார். இந்த செயல், கார்ப்பரேட் அலுவலக உத்தரவை அப்பட்டமாக மீறுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

எனவே, கார்ப்பரேட் அலுவலக கடிதங்களை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு வழங்குவது தொடர்பான, கார்ப்பரேட் அலுவலக உத்தரவை, கறாராக அமல்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு 18.06.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது. 

தோழர் P.அபிமன்யு,
பொதுச் செயலாளர்