Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, June 20, 2025

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது!


ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை கூட்ட நிர்வாகம் அதீத கால தாமதத்தை ஏற்படுத்தியதை, நமது தோழர்கள் அறிவார்கள். இந்த சூழ்நிலையில், 25.06.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அறைகூவலை, போராட்ட பிரகணடனமாக, BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்கள் இணைந்து 19.06.2025 அன்று, CMD BSNLக்கு வழங்கியது. அநீதி கண்டு வெகுண்டெழுந்து, ஆர்ப்பரித்து போராட ஊழியர்கள் தயாராகி வருவதை, நிர்வாகம் உணர்ந்தது. ஊழியர்களின் கோபத்தில் உள்ள நியாயத்தை, முழுமையாக உள்வாங்கியது. 

விளைவு, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த  கூட்டம், 27.06.2025 அன்று நடைபெறும் என, கார்ப்பரேட் அலுவலகம், 20.06.2025 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம். ஊதிய மாற்றத்தை, விரைவில் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும், நமது மத்திய சங்கம் மேற்கொண்டு வருவதை, மாவட்ட சங்கம் வரவேற்கிறது. 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்