Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 19, 2025

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகள்.


2025, ஜூலை 9ஆம் தேதி பொது வேலை நிறுத்ததம் நடத்த, மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளதை, அனைத்து தோழர்களுக்கும் தெரியும்.  இந்த வேலை நிறுத்தத்தில், BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் பங்கேற்க உள்ளன.  இதற்கான வேலை நிறுத்த அறிவிப்பு, CMD BSNL மற்றும் தொலைத் தொடர்பு துறையின் செயலாளர் ஆகியோருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட, கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்துவது என, 17.06.2025 அன்று நடைபெற்ற, அகில இந்திய மைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  

1) 30.06.2025, பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை, ஊழியர்களுக்கு விளக்கும் வகையில், உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2) 30.06.2025 முதல் 05.07.2025  வரை "ஊழியர் சந்திப்பு இயக்கம்" நடத்த வேண்டும்.  ஒவ்வொரு ஊழியரையும் நேரில் சந்தித்து, வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை அவர்களிடம் விளக்க வேண்டும்.

3) மத்திய சங்கம், ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒரு சுற்றறிக்கை தயாரித்து அனுப்பும்.  மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் இந்த சுற்றறிக்கையை அச்சடித்து, ஊழியர் சந்திப்பு இயக்கத்தின் போது அவற்றை ஊழியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தோழர் P.அபிமன்யு
பொதுச் செயலாளர்