Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 12, 2025

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரை, பொதுச் செயலாளர் சந்தித்தார்

 



ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, 11.06.2025 அன்று சந்தித்தார்.  ஊதிய மாற்ற பிரச்சனையில், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக, பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பினார்.  விரைவில் ஊதிய மாற்றத்தை இறுதி செய்ய, நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவர், பொதுச் செயலாளிடம் தெரிவித்தார்.  

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு செயல்படும் விதத்தைக் கண்டு, BSNL ஊழியர் சங்கம் விரக்தி அடைந்துள்ளதாக, தலைவரிடம், பொதுச் செயலாளர் தெரிவித்தார்.  கடந்த ஆறு மாத காலத்தில், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், ஒரே ஒரு முறை தான் நடைபெற்றுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.  ஊதிய தேக்கநிலை காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் துன்புறுவதாக கூறியதோடு, ஊதிய மாற்ற பிரச்சனை விரைவில் தீர்வு காண வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று பொதுச் செயலாளர் தெரிவித்தார்.  

ஊதிய மாற்ற பிரச்சனை, விரைவில் தீர்வு காணப்படவில்லை எனில், போராட்ட இயக்கங்கள் நடத்துவது தொடர்பாக,  BSNL ஊழியர் சங்கம் பரிசீலிக்கும் என்று கூறப்பட்டுள்ள, 10.06.2025 அன்று, DIRECTOR (HR)க்கு, BSNL ஊழியர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தின் நகலை, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரிடம், அவர் வழங்கினார்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்