Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, June 28, 2025

மாண்புமிகு பாரத பிரதமருக்கு BSNLEU கடிதம்

 


TCSன் கருவிகள் மூலம் வழங்கப்படும், BSNLன் தரம் குறைந்த 4G சேவை பிரச்சனையில் தலையிட வேண்டுமென, மாண்புமிகு பிரதமருக்கு, BSNL ஊழியர் சங்கம் வேண்டுகோள். TCS நிறுவனம் வழங்கிய ஒரு லட்சம் 4G BTSகள் செயல்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது என, அரசாங்கமும், BSNL நிர்வாகமும் தெரிவித்து வருகின்றன. ஆனால், BSNLன் 4G சேவையின், குறைவான தரம் காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள BSNL வாடிக்கையாளர்கள், கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  குரல் அழைப்புகளை கூட பேச முடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  DATAவின் தரவிறக்க வேகமும் மிக மோசமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், BSNLஐ விட்டு வெளியேறி வருகின்றனர்.  சேவையின் தரத்தை உயர்த்த, TCS நிறுவனம், எந்த ஒரு அக்கறையும் காட்டுவதாக தெரியவில்லை.

பொருத்தமான தலையீடு செய்ய வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், பல கடிதங்களை மாண்புமிகு மத்திய துறை தொடர்பு அமைச்சருக்கு எழுதியுள்ளது.  ஒரு இடைக்கால பணியாக, வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் 4G வலைத்தளத்தை பயன்படுத்தி, BSNL, தனது வாடிக்கையாளர்களுக்கு, 4G சேவையை வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையையும்BSNL ஊழியர் சங்கம் முன் வைத்தது.  வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான இந்திய அரசாங்கத்தால், இந்த வசதியை, கண்டிப்பாக செய்து தர இயலும். இந்தப் பிரச்சனையில் அவரது தலையீடு தேவை என வலியுறுத்தி, நமது இந்திய நாட்டின் பிரதமருக்கு, BSNL ஊழியர் சங்கம், 27.06.2025 அன்று ஒரு கடிதம் எழுதி உள்ளது.

தோழர் P.அபிமன்யு, 
பொதுச் செயலாளர்