தற்போது, நகரப் பகுதிகளில், BSNL, AIR FIBRE சேவையை வழங்குவதில்லை. கிராமப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மட்டும், FRANCHISEES/ TIPகள், இந்த சேவையை வழங்கி வருகின்றனர். நகரப் பகுதிகளில் BSNLன் குழுவே, AIR FIBRE சேவையை வழங்கியது என்றால், கேபிள்கள் பழுது ஏற்படும் பொழுது, FTTH மற்றும் மொபைல் சேவைகளை பராமரிக்க, பயனுள்ளதாக இருக்கும். மேலும் இயற்கை பேரழிவுகள், VVIP வருகை, LEASED LINE வழங்குவது போன்ற சமயங்களிலும், இது பயனுள்ளதாக இருக்கும்.
கொல்கத்தாவில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவில், இந்த பிரச்சனை, விவாதிக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் BSNL குழுக்களால், AIR FIBRE சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (CM)க்கு, 03.06.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்