போபாலில் நடைபெற்ற SNEA சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உரையாற்றினார்.
19.05.2025 முதல் SNEA சங்கத்தின் அகில இந்திய மாநாடு, போபாலில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான 21.05.2025 அன்று, CMD BSNL, திரு A.ராபர்ட் J.ரவி, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, SNEA சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் G.L.ஜோகி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். முன்னதாக, SNEA சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் மணிஷ் சமாதியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வந்திருந்த அனைவரையும், SNEA பொதுச் செயலாளர் தோழர் M.S.அடசூல், வரவேற்று பேசினார். BSNL சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அதன் வளர்ச்சியை மீண்டும் முன்னுக்கு கொண்டு வரவும், நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை பற்றி, CMD BSNL, தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
BSNLன் நிதி நிலையை பலப்படுத்த, AUAB என்ற பதாகையின் கீழ், BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் எடுத்த பல முயற்சிகள் தொடர்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, தனது உரையில், விரிவாக எடுத்துரைத்தார். மேலும், அரசாங்கத்தின் கொள்கைகள், BSNLன் நிதிநிலையை எவ்வாறு முடமாக்கியது என்றும் விவரித்தார். BSNL நலன்களையும், அதில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களையும் பாதுகாக்க, ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என இந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் அறைகூவல் விடுத்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
