அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் BSNLEU மத்திய சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட அறைகூவல் அடிப்படையில், ஊதிய மாற்றம் உள்ளிட்ட BSNL ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் "எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்", 20.05.2025 அன்று, நாடு முழுவதும் நடைபெற்றது. நமது சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், 20.05.2025 அன்று, சேலம் GM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU) M. மதியழகன் (AIBDPA) P. செல்வம் (TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பை ஏற்றனர். ஆர்ப்பாட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து தோழர் S. அழகிரிசாமி, COS., AIBDPA துவக்கவுரை வழங்கினார். தோழர்கள் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, C. லாவண்யா, கன்வீனர், BSNLWWCC, சேலம் மாவட்ட குழு, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA, தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள. தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU சிறப்புரை வழங்கினார்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 75க்கும் மேற்பட்ட தோழர்கள், திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் R. முருகேசன், கிளை செயலர், BSNLEU, GM அலுவலகம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.