29.04.2025 அன்று நடைபெற்ற, கடைசி ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில், எந்த ஒரு பலன் தரும் விவாதமும் நடைபெறவில்லை. அந்தக் கூட்டத்தில், அடுத்த ஊதிய பேச்சுவார்த்தை குழு கூட்டம், 2025, மே மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. எனினும், 20.05.2025 அன்று, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரை, BSNLEU பொதுச் செயலாளர் சந்தித்தபோது, DIRECTOR (HR) வெளிநாடு சென்று இருப்பதால், 2025, ஜூன் முதல் வாரத்தில் தான், அடுத்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
2025, ஜூன் மாதத்தில், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கான அறிவிப்பு, உடனடியாக வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என, ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் தலைவருக்கு, 22.05.2025 அன்று, BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
