Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, May 25, 2025

மகப்பேறு விடுப்பு - உச்ச நீதிமன்றம் கருத்து


மகப்பேறு விடுப்பு என்பது, "அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள பாதுகாப்பு" என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.


மகப்பேறு விடுப்பு என்பது சமூக நீதி பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள பாதுகாப்பு என 23.05.2025 அன்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.  "உழைப்பு சக்தியில் பெண்கள் கணிசமான பங்கை வகிப்பதால், அவர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த வேண்டும்" என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  ஒரு மாநில அரசாங்கத்தின் கொள்கை, மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பை அனுமதிக்காததால், சென்னை உயர் நீதிமன்றம், முன்னதாக ஒரு பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பை மறுத்திருந்தது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இனப்பெருக்க சுகாதார பராமரிப்பு அல்லது மனம் மற்றும் உடல் நலம் ஆகியவற்றுக்கான வாய்ப்பை மறுப்பது என்பது, பெண்ணின் கௌரவத்திற்கு ஊறு விளைவிப்பது ஆகும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

(ஆதாரம்:- TIMES OF INDIA Dated 24.05.2025)