நாள்: 20.05.2025, செவ்வாய்க்கிழமை
நேரம்: நண்பகல் 12.30 மணி அளவில்,
இடம்: பொது மேலாளர் அலுவலகம், சேலம்
ஊதிய மாற்றம் உள்ளிட்ட, ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.05.2025 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு, நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு, மத்திய தொழிற் சங்கங்கள் போராட்டத்தை 09.07.2025 தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன் அடிப்படையில், நமது மத்திய சங்கமும், போராட்டத்தை ஒத்தி வைத்தது.
இருப்பினும், 20.05.2025 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, மத்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டம், 09.07.2025 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கான, தயாரிப்பு இயக்கமாக நடத்திட வேண்டும் என BSNLEU மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது.
நமது சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கம், CoC சார்பாக நடத்தப்படும். BSNLEU - AIBDPA - TNTCWU சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.