Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 8, 2025

ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும்!


DOT, DTS மற்றும் DTO ஊழியர்களின் வாரிசுகளாக, பரிவு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது. 

26.07.2023 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், ஊழியர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும், தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கும், தொடர்ச்சியாக கடிதங்களை எழுதி வருகிறது. கடைசியாக 04.04.2025 அன்று, இந்த பிரச்சனை தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு, BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதி இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, BSNL ஊழியர் சங்கம், 06.05.2025 அன்று, 30.09.2000க்கு முன், DOT, DTS மற்றும் DTOயில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளாக, 01.10.2000க்கு பின்  BSNLலில் பரிவு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

தோழர் P.அபிமன்யு,
பொதுச் செயலாளர்