BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, 06.05.2025 அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், வேலை நிறுத்த ஆயத்த சிறப்புக் கூட்டம், சக்திமிக்கதாக, நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், DP., BSNLEU, M. மதியழகன், DP., AIBDPA, K. ராஜன், DP., TNTCWU கூட்டுத் தலைமை பொறுப்பை ஏற்று, தலைமை குழுவாக செயல்பட்டனர். தோழர் R. ரமேஷ் மாவட்ட பொருளர், BSNLEU அனைவரையும் வரவேற்றார்.
தலைமை உறைகளுக்கு பின், BSNLEU தமிழ் மாநிலச் செயலர் தோழர் B. மாரிமுத்து முறைப்படி கூட்டத்தை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவர் தம் உரையில், BSNLEU சங்கத்தின் நீண்ட நெடிய வரலாறு, நடத்திய போராட்டங்கள், இயக்கங்கள், நிகழ்த்திய சாதனைகள், இன்றைய BSNL நிலை, மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், NEPP பதவி உயர்வு கொள்கைகளில் மாற்றம், போக்குவரத்துப்படி மாற்றம், 20.05.2025 ஒரு வேலை நிறுத்தத்தின் நோக்கங்கள், கோரிக்கைகள், 11வது அகில இந்திய மாநாடு ஏற்பாடுகள், நிதி தேவை என பல விஷயங்களை விளக்கி துவக்கவுரை வழங்கினார்.
அவரை தொடர்ந்து, தோழர்கள் S. அழகிரிசாமி, COS., AIBDPA, C. பாஸ்கர், CT., TNTCWU, M. சண்முகம், COS., BSNLEU, ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழர்கள் M. செல்வம், DS., TNTCWU, S. தமிழ்மணி,DS., AIBDPA, E. கோபால், ACS., AIBDPA, S. ஹரிஹரன், DS., BSNLEU ஆகியோர் வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி, சிறப்புரை வழங்கினார்கள். கூட்டத்தில், வேலை நிறுத்த நோக்கங்களையும், கோரிக்கைகளையும், விளக்கி, BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக தயாரிக்கப்பட்ட நோட்டீஸை, BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் B. மாரிமுத்து வெளியிட, AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, அதை பெற்றுக்கொண்டார்.
தோழர் P. தங்கராஜூ, மாவட்ட பொருளர், AIBDPA, நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.கடுமையான கோடை காலம். அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரக்கூடிய சூழலிலும், மாவட்டம் முழுவதிலும் இருந்து, திரளாக தோழர்கள் பங்கேற்றது சிறப்பான விஷயம்.BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள், தோழர், தோழியர்கள் என கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், சேலம் மாவட்ட CoC சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பான ஏற்பாடுகள் செய்த, BSNLEU செவ்வை கிளை TNTCWU நகர கிளை தோழர்களை, மனதார பாராட்டுகிறோம்.