கடந்த 26.04.2025 அன்று சேலம் மாவட்ட CoC கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவின் அடிப்படையில், இந்த ஆண்டும், உலக தொழிலாளர் தினத்தை, மிகுந்த எழுச்சியோடு, நமது சேலம் மாவட்டத்தில் கொண்டாடுவது என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 01.05.2025 அன்று, மாவட்டம் முழுவதும் உள்ள நமது கிளைகளில், BSNLEU - AIBDPA - TNTCWU தோழர்கள் இணைந்து, மே தின கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்த செய்தியை, இந்த ஆண்டு தொழிலாளர் தின செய்தியாக தோழர்களுக்கு தெரியப்படுத்தி, மே தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதே போல் 01.05.2025 அன்று மாலையில், சேலம் மற்றும் பள்ளிபாளையம் நகரங்களில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பான மே தின பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
படங்கள் மற்றும் செய்திகளை மாவட்ட சங்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
கன்வீனர், CoC
குறிப்பு: 01.05.2025 அன்று சேலம் நகர கிளைகள் சார்பாக, கீழ்க்கண்ட அட்டவணைப்படி, மே தின கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.
காலை 7.30 மணியளவில் மெயின் தொலைபேசி நிலையம்
காலை 8.15 மணியளவில், செவ்வை தொலைபேசி நிலையம்
காலை 9 மணியளவில், மெய்யனூர் தொலைபேசி நிலையம்
காலை 9.45 மணி அளவில்,
GM அலுவலகம்
மாலை 4 மணி அளவில்,
சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி புறப்படும். மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் வழியாக கோட்டை மைதானத்தை சென்றடையும். பின்பு கோட்டை மைதானத்தில், மே தின சிறப்பு கூட்டம் நடைபெறும்.