Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 10, 2025

தரைவழி காப்பர் கேபிள்கள் - CMDக்கு - BSNLEU கடிதம்.


BSNLன் தரைவழி காப்பர் கேபிள்கள், சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது, பயனற்று கிடக்கும் காப்பர் கேபிள்களை, உடனடியாக திரும்ப எடுத்து, விற்பனை செய்ய வேண்டும் என BSNLEU, CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது. தரைவழி காப்பர் கேபிள் மூலம் வழங்கப்பட்டு வந்த, லேண்ட் லைன் மற்றும் பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன.  பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் பணி நிறைவடைந்து விட்டது.  இதன் விளைவாக தரைக்கு அடியில் உள்ள BSNLன் காப்பர் கேபிள்கள் பயனற்று கிடக்கின்றன.  

காப்பர் பெரும் மதிப்புமிக்க பொருளாகும்.  இந்த காப்பர் கேபிள்களை திரும்ப எடுத்து, விற்பனை செய்தால் BSNLக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும்.  நாட்டிலுள்ள பல பகுதிகளில், இந்த காப்பர் கேபிள்களை, சமூக விரோத சக்திகள் கொள்ளையடித்து வருகின்றன.  எனவே, பயனற்று கிடைக்கின்ற இந்த காப்பர் கேபிள்களை, திரும்ப எடுத்து, விற்பனை செய்வதற்கு, உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு 09.04.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது. 

தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய,,மாநில சங்கங்கள் 

கடிதம் காண இங்கே சொடுக்கவும்