ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் கூட்டத்தை கூட்டப்படுவதில், விரும்ப தகாத காலதாமதம் ஏற்படுகிறது. நிர்வாகத்தின் அலட்சிய மற்றும் பொறுப்பற்ற போக்கு கண்டனத்திற்குரியது. 19.12.2024 அன்று நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பிறகு, கடந்த நான்கு மாதங்களாக எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. கடந்த 10.03.2025 அன்று ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழு கூட்டம் நடத்துவதற்கு, தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் தலைவர் பயிற்சிக்கு சென்று விட்டார் என காரணம் கூறினார்கள். ஊழியர்கள் கடும் சீற்றத்திற்கு ஆளானார்கள். ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் இருக்கும் பொழுது. தலைவர் எப்படி பயிற்சிக்கு அனுப்பப்பட்டார் என சரமாரியாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினார்கள். மத்திய சங்கம் பொறுமை காத்தது. அதற்குப் பிறகும், தொடர்ச்சியாக மத்திய சங்கம் பல முயற்சிகள் எடுத்தும், அத்தனையும் வீணானது.
ஒரு அதிகாரி LTC விடுப்பில் சென்று விட்டார், மற்றொரு அதிகாரி விடுப்பில் சென்று விட்டார், என ஒரே மாதிரியான STEREO TYPE பதிலை திரும்பத் திரும்ப சொன்னார்கள். மனிதவள இயக்குனர் அவர்களின் கவனத்திற்கும் பிரச்சினையை கொண்டு சென்றோம். நிர்வாகத்தின் மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் நிர்வாகத்திற்கு, ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் நடத்துவதற்கு மட்டும் ஏதோ காரணங்களால், நேரம் கிடைக்கவில்லை.
நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடாக நாம் இதை பார்க்கிறோம். ஊதிய மாற்ற கமிட்டி கூட்டம் கூட்ட தேதி குறிக்க வேண்டிய SR பிரிவின் பொறுப்பற்ற செயல்பாடுகள் தான் இதற்கு பிரதான காரணம். நமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நமது பொறுமையை, பலவீனமாக நிர்வாகம் பார்க்கக் கூடாது என நிர்வாகத்தை எச்சரிக்க விரும்புகிறோம்.
தோழமையுடன்
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்