BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு காணொளி காட்சி மூலம் இன்று (08.04.2025) நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு துவங்கிய இந்த மத்திய செயற்குழுவிற்கு, அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா தலைமை தாங்கினார். ஆய்வு பொருட்கள் ஏற்பிற்கு பின், முன்னாள் அகில இந்திய பொருளாளரும், சட்டீஸ்கர் மாநில செயலாளருமான தோழர் S.C.பட்டாச்சார்யா அவர்களின் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களின் தலைமை உரைக்கு பின், பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, கீழ்க்கண்ட முக்கியமான ஆய்படு பொருட்கள் தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்தார்:-
அ) ஊதிய மாற்ற பிரச்சனையின் தற்போதைய நிலை.
ஆ) BSNLன் 4G சேவையின் மீதான பரவலான புகார்கள் மற்றும் பெருமளவு வாடிக்கையாளர்களை, BSNL இழப்பது தொடர்பாக.
இ) தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு, நான்கு தொழிலாளர் தொகுப்புகளை எதிர்த்து, 18.03.2025 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற, தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கத்தின் முடிவுகள்.
ஈ) கியூபா நிவாரண நிதி வசூலிப்பது.
பொதுச் செயலாளர் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர். விரிவான விவாதத்திற்கு பின் கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டன:-
1) ஊதிய மாற்றக் குழுவின் கூட்டத்தை உடனடியாக கூட்ட, BSNL நிர்வாகத்தை வலியுறுத்துவது. காலதாமதம் ஆனது என்று சொன்னால், பொருத்தமான போராட்ட இயக்கங்களை அகில இந்திய அகில இந்திய மையம் முடிவெடுக்கலாம்.
2) BSNLன் 4G சேவையை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு, அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு, மத்திய சங்கம் பேசி முடிவெடுக்க வேண்டும்.
3) தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு, நான்கு தொழிற்சங்க தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடெல்லியில்18.03.2025 அன்று நடைபெற்ற, தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கத்தின் முடிவுகளை அமலாக்குவது.
4) கியூபாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான தடைகளை ஊழியர்கள் மத்தியில், 2025 ஏப்ரல் 21 முதல் 26 வரை பிரச்சாரம் செய்து, கியூபா நிவாரண நிதி வசூலிப்பது.