Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, April 22, 2025

BSNL வாடிக்கையாளர்களுக்கு, E-SIM வழங்க வேண்டும் - BSNLEU கடிதம்


BSNL, தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னமும், E-SIM வசதியை அறிமுகப்படுத்த வில்லை.  அதே சமயம் நமது போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு E-SIM வழங்கி வருகின்றன. BSNLன் உயர் மட்ட வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு, E-SIM தேவை என, BSNL ன் வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகுகின்றன.  ஆனால் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கையறு நிலையில் உள்ளனர்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு, E-SIM வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 23.09.2024 அன்றே, CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, BSNL வாடிக்கையாளர்களுக்கு, உடனடியாக  E-SIM வழங்க வேண்டும் என மற்றும் ஒரு கடிதத்தை, 21.04.2025அன்று BSNL ஊழியர் சங்கம்,  CMD BSNLக்கு எழுதி உள்ளது.

தோழமையுடன், 
S.ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்