Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, April 20, 2025

பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து, 4G சேவை மேம்பாடு சம்பந்தமாக மகஜர்!


தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின், 36வது பொது மாநாடு, வருகிற 2025 ஆகஸ்ட் 9,10,11 தேதிகளில், சேலம் மாநகரில் நடத்த, AIIEA அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தை, 19.04.2025 அன்று சேலத்தில் நடத்தியது. கூட்டத்திற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தை, AIIEA அமைப்பு அழைத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு T. M. செல்வகணபதி, அவர்களை அழைத்திருந்தார்கள்.

17.04.2025 அன்று நடைபெற்ற, மாவட்ட செயற்குழுவில், நமது 4G சேவை குறைபாடு சம்பந்தமாக, செயற்குழு உறுப்பினர்கள், தங்களின் கவலையை பதிவு செய்ததன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்லலாம் என்கிற யோசனை பிறந்தது.  இருப்பினும், MP கூட்டத்திற்கு வருவாரா? விழாவில் கலந்து கொள்வாரா என்கிற ஐயம் இருந்ததன் காரணமாக, ஒரு மகஜரை தயாரித்து கையில் வைத்துக்கொண்டு, நமது தோழர்களோடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டோம். 

பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிக்கு வந்தார். மாநாட்டு வரவேற்பு குழுவின் வரவேற்பு குழு தலைவராக பணியாற்ற சம்மதம் தெரிவித்து, சிறப்பான கருத்துக்களை பதிவு செய்தார். கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட நல்வாய்ப்பை பயன்படுத்தி, BSNL நிறுவன 4G சேவை மேம்பாடு, தற்போது வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், TCS நிறுவனத்தின் நிலைப்பாடு, உள்ளிட்ட விஷயங்களை விளக்கி, சேலம் மாவட்ட சங்கம் சார்பாக ஒரு மகஜரை வழங்கினோம். 

திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை என்று சொன்னாலும், சேலம் மாவட்ட சங்கத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. சேலம் பாராளுமன்ற உறுப்பினர், உயர்திரு T.M. செல்வகணபதி அவர்கள், நமது மனுவை வாங்கிக்கொண்டு, சுருக்கமாக வாசித்து, மீண்டும் மாவட்ட சங்கத்தை தொடர்பு கொண்டு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்கிறேன், அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார்.

CITU, TNGEA, BEFI, ITEF, NFPE, CITU STEEL, DYFI, SFI, TNMSRA, LIC Class1, LICAOI, விவசாயிகள் சங்கம், விதொச, தமுஎகச, NCCPA, AILU உள்ளிட்ட அமைப்புகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். BSNLEU உள்ளிட்ட மேற்கண்ட அமைப்புகளை உள்ளடக்கி, மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.

தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்

மகஜர் காண இங்கே சொடுக்கவும்