11வது மாவட்ட மாநாட்டிற்கு பின், நேரடி முதல் மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று (17.04.2025) மாவட்ட சங்க அலுவலகத்தில், சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் R. ரமேஷ், மாவட்ட பொருளர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் C. மாணிக்கம், மெயின் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம் துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர் விளக்கவுரை வழங்கினார்.
அதன் பின் செயற்குழு உறுப்பினர்கள் முழுமையாக விவாதத்தில் பங்குபெற்றனர். இடை இடையே, AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.
11வது மாவட்ட மாநாட்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. தோழர் T. கார்த்திகேயன், மாவட்ட அமைப்பு செயலர், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். மதிய உணவுடன், கூட்டம் நிறைவு பெற்றது. 22 செயற்குழு உறுப்பினர்களில், ஒரு உறுப்பினரை தவிர, 21 தோழர்கள் கூட்டத்தில் பங்குபெற்றது, சிறப்பானது. விவாதத்தில் அனைத்து தோழர்களும் பங்குபெற்றது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை, நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது.
2. கோவையில் வருகிற 22.07.2025, 23.07.2025 தேதிகளில் நடைபெறவுள்ள, 11வது அகில இந்திய மாநாட்டிற்கு, ஒவ்வொரு உறுப்பினரிடமும் இருந்து ரூ1000 நன்கொடை பெறுவது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரூ2000 நன்கொடை வழங்குவது. அதன் அடிப்படையில் கிளைகளுக்கு கோட்டா நிர்ணயிக்கப்பட்டது.
3. வேலை நிறுத்த தயாரிப்பு மற்றும் அகில இந்திய மாநாட்டு பிரச்சார கூட்டங்கள், அனைத்து கிளைகளிலும், நடத்துவது.
4. இனி மாதம் மாதம், மாவட்ட செயலர், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும், கூட்டங்கள், இயக்கங்கள் நடை பெறும் பொழுது, சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்பது. கூட்டங்கள் நடைபெறாத சமயங்களில், குறைந்த பட்சம், சார்பு கிளை செயலர், பொறுப்பு மாவட்ட சங்க நிர்வாகியுடன் இணைந்து, ஒவ்வொரு உறுப்பினரையும், அலைபேசியில், கூட்டுத் தொலைபேசி அழைப்பு (conference call), முறையில் அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்பது.
5. ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளை வடித்து எடுத்து, மகஜர் வழங்குவது. தொடர்ந்து, நிர்வாகத்தோடு பேசுவது.
6. உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, BSNLWWCC, மாவட்ட குழு கூட்டத்தை, 2025 மே மாதம் முதல் வாரத்தில் நடத்துவது.
7. மாவட்ட சங்கத்தின் நிதி பற்றாக்குறையை போக்க, 2025 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பனி நிறைவு செய்யும் தோழர்களை, தோழமையோடு அணுகி, நன்கொடை பெறுவது.
தோழர்களே! மாவட்ட செயற்குழு முடிவுகளை, செழுமையாக நிறைவேற்ற, அனைத்து தோழர்களும், முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.