Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, April 5, 2025

பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும்!


BSNL ஆவதற்கு முன், DoTயில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, ஆனால், BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என 26.07.2023 அன்று, உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி விட்டது. எனினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதற்கு பதிலாக, வழக்கு தொடுத்த ஊழியர்களுக்கு மட்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என DoT, 22.02.2024 அன்று ஒரு உத்தரவு வெளியிட்டது. 

பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என, மத்திய தொலைதொடர்பு அமைச்சருக்கு, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே பல கடிதங்களை எழுதி உள்ளது.  ஆனால், அரசாங்கம் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.  

இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பல்வேறு நீதிமன்றங்களை அணுகி வருகின்றனர்.  இதன் விளைவாக ஊழியர்களுக்கும், அரசாங்கத்திற்கும் பெரிய நிதிச் செலவு ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு, BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்