அதற்குப் பின், BSNL ஊழியர் சங்கம், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என, தொடர்ச்சியாக பலமுறை நிர்வாகத்தின் கதவுகளை தட்டியது. ஆனால், இன்று வரை அதற்கான தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறுவது அதீத காலதாமதம் ஆகி வருவதனால், ஊழியர்கள் கடுமையான கொந்தளிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என, DIRECTOR (HR)இடம் பொதுச் செயலாளர் தெரிவித்ததோடு, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டத்தை கூட்டத்திற்கான தேதியை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஊதிய மாற்றக் குழுவின் அடுத்த கூட்டத்திற்கான தேதியை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, PGM (SR) அவர்களுக்கு, DIRECTOR (HR), உடனடியாக உத்தரவிட்டார்.
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அடுத்த ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுகூட்டம், 29.04.2025 அன்று நடைபெறும் என நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. மனிதவள இயக்குனரின் நடவடிக்கைக்கு, BSNLEU தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்