22.04.2025 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாகல்காமில், 28 சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்தபோது, நெஞ்சம் அதிர்ந்தது. அந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள். பாகல் காமிற்கு ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு புல்வெளியில், இவர்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தனர். அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கோழைத்தனத்தை BSNL ஊழியர் சங்கம், வன்மையாக கண்டிக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.