TRAI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, சந்தையில் முன்னணி பாத்திரம் வகிப்பவர் என்ற அடிப்படையில், ரிலையன்ஸ் ஜியோவின், கம்பியில்லா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 465.13 மில்லியன் ஆகும். அதனைத் தொடர்ந்து, பாரதி ஏர்டெல் நிறுவனம், 385.3 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 2024 டிசம்பர் மாத இறுதியில், வோடபோன் ஐடியா நிறுவனம், 207.25 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. BSNL நிறுவனத்தின் கம்பியில்லா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 91.72 மில்லியன். சந்தை பங்கீடு என்ற வடிவத்தில், BSNLன் பங்கு 7.99 சதவீதமாக உள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 40.42% பங்குகளையும், பாரதி ஏர்டெல் 33.49 சதவீதத்தையும், வோடபோன் ஐடியா 18.01 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்