TRAI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2024, டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான, ஜியோ, 39 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதே காலகட்டத்தில், பாரதி ஏர்டெல், 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ஆனால் வோடபோன் ஐடியா மற்றும் BSNL ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. வோடபோன் ஐடியா 17 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. BSNL நிறுவனம் 3.2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. BSNL நிறுவனம், நவம்பர் 2024 லிலும், 3.4 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்