Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, October 22, 2024

CoC சார்பாக ஆர்ப்பாட்டம்

நாள்: 25.10.2024, வெள்ளிக்கிழமை, 
நேரம்: நண்பகல் 12  மணியளவில்
இடம்: சேலம் BSNL பொது மேலாளர் அலுவலகம்.

BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 19.10.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மத்திய ஒருங்கிணைப்புக்குழு முடிவுகளை அமல் படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, நமது மாவட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு CoC சார்பாக, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.10.2024 வெள்ளிக்கிழமை அன்று, சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு, மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

         கோரிக்கைகள்:- 

1) ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும்.

2) BSNLன் 4G மற்றும் 5G சேவைகளின் துவக்கத்தை விரைவு படுத்துக.

3) 2வது VRS திட்டத்தை கைவிடு.

4) ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம், EPF மற்றும் ESI ஆகியவற்றை அமல் படுத்துக.

5) கேசுவல் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் 2 தவணை பஞ்சப்படி ஆகியவற்றை வழங்கிடு.

எனவே, நமது மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
E. கோபால்,  
கன்வீனர், CoC