27.07.2018 அன்று நடைபெற்ற ஊதிய பேச்சுவார்த்தை குழுவில், ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை அமலாக்குவதன் மூலம், தற்போதைய பேச்சுவார்த்தை குழுவில் நிலவி வரும் தேக்க நிலையை உடைக்க வேண்டுமென, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, CMD BSNL, DIRECTOR (HR) மற்றும் ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். மேலும், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் மற்றும் PGM(SR) ஆகியோருடன், பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பின்னணியில், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 23.10.2024 அன்று நடைபெறும் என கார்ப்பரேட் அலுவலகம், 14.10.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்