25.09.2024 அன்று, கொல்கொத்தாவில் துவங்கிய, BSNL ஊழியர் சங்கத்தின் இரண்டு நாள் மத்திய செயற்குழு, 26.09.2024 அன்று, வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பொதுச் செயலாளர் முன்வைத்த செயல்பாட்டு அறிக்கையினை, இந்த மத்திய செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. மத்திய செயற்குழுவின் 49 உறுப்பினர்கள், விவாதத்தில் பங்கு பெற்றனர்.
ஊதிய மாற்றம் தீர்வு காணப்படாதது, அதீத கால தாமதம் அடையும் BSNLலின் 4G மற்றும் 5G சேவைகளின் துவக்கம், 2வது VRS, FTTH சேவையின் தரம் குறைந்து வருவது உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதத்தில் முன்னுக்கு வந்தன. விரிவான விவாதங்களுக்கு பின், பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு தொகுப்புரை வழங்கினார்.
இந்த மத்திய செயற்குழுவில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன:-
a) இந்த மத்திய செயற்குழுவை ஏற்று நடத்திய, கொல்கத்தா மாநில சங்கத்திற்கு, மனதார நன்றி தெரிவித்துக் கொண்டது.
b) ஊதிய மாற்ற பிரச்சனை, உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
c) BSNLலின் 4G மற்றும் 5G சேவைகளின் துவக்கம், விரைவு படுத்த வேண்டும்.
d) BSNLலில் 2வது VRS அமலாக்கப்படுவதற்கு எதிராக.
e) மனித வள சீரமைப்பை, மறு பரிசீலனை செய்தவன் அவசியம்.
f) TIPsகளை தவிர்த்து, BSNLலே முழுமையாக, FTTH சேவைகளை வழங்குவதன் அவசியம்.
g) ஊழியர்களுக்கு, புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டியதன் அவசியம்.
h) மாநில கவுன்சில்களை அமைப்பதில், பல மாநிலங்களில் ஏற்படும் அதீத கால தாமதம்.
i) மலை மாநிலங்களுக்கும், தொலைதூர பகுதிகள் உள்ள மாநிலங்களுக்கும், ஊழியர் பதவிகளை SPECIAL SANCTION செய்யப்பட வேண்டும்.
முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பிரச்சாரம் மற்றும் போராட்ட இயக்கங்களை நடத்திட கொல்கத்தா மத்திய செயற்குழு அறைகூவல்.
ஊதிய மாற்றத்தை மறுப்பது, BSNLன் 4G / 5G சேவைகளின் துவக்கத்தை காலதாமதப் படுத்துவது, மற்றும் BSNLஇல் 2வது VRS திட்டத்தை அமல்படுத்த நிர்வாகமும், DoTயும் முயற்சிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளின் மீது கொல்கத்தாவில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு ஆழமாக பரிசீலித்தது.
BSNLஇன் மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களின் ஊதிய மாற்றமும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய மாற்றமும் தீர்வு காணப் படவில்லை என, மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் வெளியிட்ட ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவு, BSNLல் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.
2024 ஜூலை மாதத்தில் மட்டும் 29 லட்சம் வாடிக்கையாளர்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, BSNLலுக்கு மாறி வந்துள்ளனர். எனினும், 4G சேவைகளை துவக்க, BSNL தடுமாறிக் கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கம் மிகப்பெரிய பங்குதாரராக உள்ள, வோடபோன் ஐடியா நிறுவனத்தின், 4G வலைத்தளங்களை பயன்படுத்தி, BSNL நிறுவனம், தனது 4G சேவைகளை துவக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர்களுக்கு, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கடிதங்களை எழுதி வந்துள்ளது. ஆனால் வோடபோன் ஐடியாவின் 4G வலைத்தளங்களை பயன்படுத்தி, BSNL நிறுவனம் விரைவாக 4G சேவைகளை துவக்க அரசாங்கம் விரும்பவில்லை.
2020 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் 80,000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன் பின், பல இடங்களில், ஊழியர்கள் கடுமையான பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். இருந்த போதும், BSNLல் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்க, BSNL நிர்வாகமும், DoTயும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
இவ்வாறாக, BSNL நிறுவனத்தை நலிவடைந்த நிறுவனமாக மாற்றி, ஏதோ ஒரு கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க அரசாங்கம் விரும்புவதையே, அரசின் கொள்கைகளும், நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, ஊதிய மாற்றத்தையும், ஓய்வூதிய மாற்றத்தையும் விரைவில் தீர்வு காண வேண்டும், BSNL நிறுவனம், உடனடியாக 4G சேவைகளை துவக்கி, அதனை 5G சேவைகளாக மேம்படுத்துவதை துரிதப்படுத்திட வேண்டும், 2வது VRS திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி, பிரச்சார இயக்கங்களையும், போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்த பிரச்சாரங்களையும், போராட்ட இயக்கங்களையும், BSNLEU, AIBDPA மற்றும் BSNL CCWF சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு என்ற பதாகையின் கீழ் நடத்துவது என்றும் இந்த மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா மத்திய செயற்குழுவின் முடிவினை அமல்படுத்த மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் தயாராக வேண்டுமென, மத்திய சங்கம் அறைகூவல் விடுக்கின்றது.