Jio, Airtel மற்றும் Vodafone நிறுவனங்கள், கடுமையாக வாடிக்கையாளர்களை இழந்துள்ள சூழ்நிலையில், BSNL வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக, ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள், கடுமையாக வாடிக்கையாளர்களை இழந்துள்ள சூழ்நிலையில், BSNL, தனது வாடிக்கையாளர்களை கணிசமாக உயர்த்தி உள்ளது.
TRAI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2024, ஜூலை மாதத்தில், ஜியோ நிறுவனம் 7.5 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 14.10 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன. இதே மாதத்தில், BSNL, 29.30 லட்சம் வாடிக்கையாளர்களை புதியதாக இணைத்துள்ளது. நிச்சயமாக, இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் ஆகும். மூன்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும், தங்களுடைய கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளதே இதற்கு காரணமாகும்.
வந்துள்ள வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கும், மேலும் புதியதாக தனியார் நிறுவனங்களிடமிருந்து, புதிய வாடிக்கையாளர்களை அடைவதற்கும், நாடு தழுவிய அளவில், 4G சேவைகளை, BSNL, உடனடியாக துவங்க வேண்டும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் : BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
[ ஆதாரம்: Economic Times dt.21-09-2024 ]