24.09.2024 அன்று, BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மத்திய சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ரமாதேவி தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். 11 மாநிலங்களில் இருந்து 20 தோழர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். BSNL WWCC அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N. ஜோதிலட்சுமி, வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு துவக்க உரை ஆற்றினார். அவர் தனது துவக்க உரையில், பெண் ஊழியர்கள் மத்தியில் தொழிற்சங்க உணர்வை விரிவு படுத்தும் நோக்கத்தோடு, BSNL ஊழியர் சங்கத்தின் துணை அமைப்பாக BSNLWWCC உருவாக்கப்பட்டது என்று கூறினார். மேலும், முக்கியமான கோரிக்கைகளான ஊதிய மாற்றம், BSNLன் 4G துவக்கம், அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை ஒரே குடையின் கீழ் திரட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், 2வது விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பான வதந்திகள் மற்றும் இதர பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
அதன் பின் அமைப்பாளர் தோழர் K.N.ஜோதிலட்சுமி, செயல்பாட்டு அறிக்கையினை முன் வைத்தார். அனைத்து தோழர்களும் விவாதத்தில் பங்கேற்றனர். இறுதியில் குழு உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு பொதுச் செயலாளர் தோழர் P. அபிமன்யு பதில் அளித்தார். BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய கூட்டத்தை வருடத்திற்கு இரு முறை நேரடியாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை காணொளி காட்சி மூலமும் நடத்துவது என, இந்த கூட்டம் ஏக மனதாக முடிவு எடுத்தது. BSNL WWCCயின் மாநில குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவது என்றும் இந்தக் கூட்டம் முடிவு செய்தது. இறுதியில் அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N. ஜோதிலட்சுமி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழர் G.உமாராணி அவர்கள் BSNL WWCC ன் அகில இந்திய செயற்குழுவில் நமது மாநிலத்தின் WWCC செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்