VRS மற்றும் PEOPLE ANALYTIC MOBILE APP ஆகியவற்றை எதிர்த்து, அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், CMD BSNLக்கு மகஜர். 14.09.2024 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், CMD BSNLக்கு ஒரு மகஜர் வழங்கியுள்ளனர்.
இந்த மகஜரில், BSNLஇல், 2வது VRS திட்டம் அமலாக்குவதை, BSNL நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு அமலாக்கப்பட்டுள்ள, PEOPLE ANALYTIC MOBILE APPஐ திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, ஒரு சந்திப்பிற்கு CMD BSNL நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
.