பண்டிகை கால முன் பணத்தை, நிர்வாகம் வழங்க வேண்டும் என பெரும்பாலான ஊழியர்களிடமிருந்து, BSNL ஊழியர் சங்கத்திற்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு வரை, நிர்வாகத்திடம் இருந்து பண்டிகை கால முன்பணத்தை ஊழியர்கள், பெற்று வந்தனர். எனினும், நிறுவனத்தின் பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி இது நிறுத்தப்பட்டது.
ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் தரும் நடைமுறையை மீண்டும் தொடர வேண்டும் என, ஓராண்டு காலத்திற்கு முன்னரே, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLலுக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த பிரச்சனையில் ஒரு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 20.09.2024 அன்று, CMD BSNLலுக்கு, மற்றும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்