இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின், அகில இந்திய மாநாடு., 2023 ஆகஸ்ட் 12-14 சென்னையில் நடைபெறுகிறது. அதன் ஒரு நிகழ்வாக வாகன பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகளை பொதுத்துறையில் பாதுகாத்திடவும், மக்களின் சேமிப்பை காத்திட, காலி பணியிடங்களை நிரப்பி வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பாக , தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து மாநிலம் தழுவிய வாகனப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது .
மேட்டுப்பாளையத்தில் துவங்கிய பயணக் குழுவிற்கு, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில், நமது BSNLEU சார்பாக, 21.07.2023 மாலை 5 மணி அளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில், சேலம் நகர பகுதியில் உள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.