27.07.2023 வியாழக்கிழமை, நண்பகல் 12.30 மணி அளவில்,
சேலம் பொது மேலாளர் அலுவலகம்
கடந்த இரண்டு மாதங்களாக, மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதை உலகம் முழுவதும் அறியும். முன்னெப்போதும் இல்லாத அளவில் வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், வன்முறைகளை தடுத்து நிறுத்த, எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும், மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை. “ஒட்டு மொத்த, அரசியல் அமைப்பு சட்ட மற்றும் மனித உரிமை மீறல்கள்” மணிப்பூரில் நடைபெற்று வருகின்றன என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, குறிப்பிடத் தக்கது. மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த, மத்திய அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க வில்லை எனில், அதற்கான நடவடிக்கையை உச்ச நீதிமன்றமே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், உச்ச நீதிமன்றம், அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி, 27.07.2023 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் மற்றும் BSNLWWCC ஆகியவை அறைகூவல் விடுத்துள்ளன.
கோரிக்கைகள்:-
அ) மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்து!
ஆ) மணிப்பூரில் வன்முறைகளுக்கு முடிவுகட்டி, அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடு!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நமது சேலம் மாவட்டத்தில், 27.07.2023 வியாழக்கிழமை அன்று, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், நண்பகல் 12.30 மணி அளவில், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதும் உள்ள BSNLEU - AIBDPA - TNTCWU தோழர்கள் திரளாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.