BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம், 05-06-23, 06-06-23 ஆகிய இரண்டு நாட்கள், மதுரை தோழர் சுனில் மொய்த்ரா ஹாலில் (AIIEA சங்க அலுவலகம்), மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு மற்றும் அகில இந்திய உதவிப்பொதுச் செயலாலர் தோழர் S.செல்லப்பா கலந்து கொண்டார்கள்.
05-06-2023 அன்று காலை 10.00 மணிக்கு, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் முன்னிலையில், பொதுச் செயலாளர் தோழர் P. அபிமன்யு விண்ணதிரும் கோசங்களுக்கு மத்தியில் சங்கக் கொடியினை ஏற்றினார். தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை, மாநில உதவிச்செயலாலர் தோழர் M.பாபு முன்மொழிய, மாநில செயற்குழு அஞ்சலி செலுத்தியது. விவாதக் குறிப்புக்களை மாநில செயலாளர் தோழர் P.ராஜூ விவரித்தார். மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷணன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து அகில இந்திய உதவிப்பொதுச் செயலாளர் தோழர் S.செல்லப்பா உரையாற்றினார்.
அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு இந்த செயற்குழுவை துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் BSNL ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் கிடைக்க வேண்டிய சம்பள மாற்றம், ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு மற்றும் BSNLக்கு 4G மற்றும் 5G போன்ற கோரிக்கைகளுக்காக, Joint forum அமைக்கப்பட்டு போராட்ட இயக்கங்கள் அறிவிக்ககப் பட்டுள்ளதையும், மற்றும் 06,07-05-2023, ஆகிய தேதிகளில் போபாலில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவுகள் குறித்தும் விரிவாக பேசினார்.
05.06.2023 அன்று மதியம் 3 மணிக்கு, திட்டமிட்டபடி, மாநில செயலாளர் தோழர் P.ராஜூ மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் T.பிரேமா ஆகியோரது பணி நிறைவு பாரட்டுவிழா, மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் தோழர் P. சம்பத் கலந்து கொண்டார். அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு, அகில இந்திய உதவிப்பொதுச் செயலாளர் தோழர் S.செல்லப்பா, NFTE மாநில செயலாளர் தோழர் K.நடராஜன், சென்னை தொலைபேசி மாநில BSNL ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர தோழர் M.ஶ்ரீதர் சுப்ரமணியன், AIBDPA மாநில செயலாளர் R.ராஜசேகர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில அமைப்பாளர் தோழர் பெர்லின் கனகராஜ் மற்றும் TNTCWU மாநில செயலாளர் தோழர் M. சையது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தோழர் P.ராஜூ மற்றும் தோழர் T.பிரேமா ஏற்புரை வழங்கினார்கள் மாநில உதவிச்செயலாளர் தோழ்ர் K.சீனிவாசன் நன்றி கூறினார்.
06-06-2023, இரண்டாம் நாள் காலை 9.00 மணி முதல் ஆய்படு பொருள் மீது 32 தோழர்கள், 4.30 மணி நேரம் விவாதத்தில் பங்கேற்றனர். மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷணன் , அகில இந்திய உதவிப்பொதுச் செயலாலர் தோழர் S.செல்லப்பா விவாதத்தில் வந்த கருத்துக்களுக்கு விளக்கம் கொடுத்தனர். மாநில செயலாளர் தோழர் P.ராஜூ தொகுப்புரை வழங்கினார்.
முடிவுகள்
• 10-06-2023 தேதிக்குள் AIAWU சங்கத்திற்கான நிதியை கொடுப்பது.
• Joint Forumத்தின் இரண்டாவது கட்ட இயக்கமான, கவர்னருக்கு மனு கொடுக்க 14-06-2023 அன்று நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க, மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் தோழர்களை திரட்டி கலந்து கொள்ள செய்வது.
• 07.07.2023 அன்று நடைபெற உள்ள Joint Forum இயக்கமான டெல்லி போராட்டத்திற்கு செல்லவும் தோழர்களை திரட்டுவது.
• 16-06-2023 முதல் உறுப்பினர் சேர்ப்பதில் அதிக முயற்சி எடுத்து உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது.
• CNTX பகுதி உறுப்பினரை CGM Office பகுதியில் இணைப்பது குறித்து சென்னை தொலைபேசியுடன் பேசி முடிவெடுப்பது.
• மாவட்ட மாநில சங்கங்களின் நிதி தட்டுப்பாட்டை போக்க உறுப்பினர்களிடம் ரூ500 வசூலித்து மாவட்டத்திற்கு ரூ200 மாநிலத்திற்கு ரூ300 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வது. இந்த நிதி வசூலினை, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நிறைவு செய்திட வேண்டும்.
• உரியகாலத்தில் மாவட்ட மாநாடுகளை நடத்த மாவட்ட சங்கங்கள் திட்டமிட வேண்டும்.
• ஆகஸ்ட் 1 அன்று விருது நகரில் நடைபெறும் BSNL WWCC 4வது மாநில மாநாட்டிற்கு, மாவட்டச் சங்கங்கள் சொல்லப்பட்டுள்ள சார்பாளர்களை அனுப்பி வைப்பதில் கறார் தன்மை வேண்டும்.
• TNTCWU மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளதால், அதற்குமுன் அனைத்து மாவட்ட மாநடுகளையும் நடத்ததிட வேலைகள் நடைபெற்று வருகிறது. BSNLEU மாவட்ட சங்கங்கள் முழு ஆதரவை கொடுக்க வேண்டும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: தமிழ்மாநில சங்கம்
குறிப்பு : சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த மதுரை மாவட்ட சங்கத்தை, சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.