Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 12, 2023

நிர்வாகத்தின் தன்னிச்சையான உத்தரவு

ஊழியர்களின் சங்க உறுப்பினர் விருப்பத்தை மாற்றுவதற்கு விருப்பம் தெரிவிப்பது தொடர்பான கார்ப்பரேட் அலுவலகத்தின், எரிச்சலூட்டும் உத்தரவு திரும்ப பெறப் பட்டுள்ளது

BSNL ஊழியர்கள், தங்களின் சங்கங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே   மாற்றிக் கொள்ள முடியும் என்கிற கார்ப்பரேட் அலுவலகத்தின் எரிச்சலூட்டும் உத்தரவு தொடர்பாக, 05.06.2023 அன்று BSNL ஊழியர் சங்கம், தனது இணைய தளத்தில் தெரிவித்திருந்தது.  இது தொடர்பாக தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து, BSNL ஊழியர் சங்கம், அன்றைய தினமே, CMD BSNLக்கு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், BSNL ஊழியர்களில் கணிசமான பகுதியினருக்கு, கணினி பயன்பாட்டில் போதிய பரீட்சயம் இல்லை என்பது தெளிவாக சுட்டிக்காட்ட பட்டுள்ளது.  எனவே, ஆன்லைன் மூலமாகத்தான் விருப்பம் தெரிவிக்க முடியும் என்கிற கார்ப்பரேட் அலுவலக உத்தரவு,  சில சுயநல சக்திகளால், தவறாக பயன்படுத்த முடியும். இந்த பிரச்சனையில், CMD BSNL உடனடியாக தலையிட கோரியிருந்தது. தன்னிச்சையான இந்த உத்தரவு திரும்ப பெற வேண்டும் என கடுமையான யாக வலியுறுத்தப்பட்டது. 

அதன் விளைவாக, ஆன்லைன் மூலமாகத்தான் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பிக்க முடியும் என்கிற கார்ப்பரேட் அலுவலக உத்தரவு திரும்ப பெற பட்டுள்ளது.   06.06.2023  அன்று, கார்ப்பரேட் அலுவலகம் மாற்றி  வெளியிடப் பட்டுள்ள உத்தரவின் படி,  பழையபடி மனுக்களை கொடுத்தே தங்கள் விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம்.  

இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டதற்கு, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு‌ தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  அதே சமயத்தில், இது போன்ற பிரச்சனைகளில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கங்களை கலந்தாலோசிக்காமல், கார்ப்பரேட் அலுவலகம், தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வது, நிறுவனத்தில் நிலவி வரும் தொழில் அமைதியை சீர்குலைக்கும் என்றும்  BSNL ஊழியர் சங்கம் எச்சரிக்க விரும்புகிறது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய / மாநில சங்கங்கள் 

குறிப்பு:

BSNL நிர்வாகத்தின் பிற்போக்கான இந்த உத்தரவு வெளியிடப்பட்டவுடன், துரிதமாக செயல்பட்டு கடுமையான கடிதம் எழுதி, சாதக உத்தரவை ஒரே நாளில் பெற்று கொடுத்த, BSNLEU மத்திய சங்கத்திற்கு, சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

பிற்போக்கான 05.06.2023 தேதியிட்ட உத்தரவு BSNLEU கடிதத்துடன்  

எரிச்சலூட்டும் உத்தரவு திரும்பபெறப்பட்ட 06.06.2023 தேதியிட்ட உத்தரவு