Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 12, 2023

14.06.2023 கவர்னர் மாளிகை நோக்கி பேரணி - JFஅறைகூவல்


ஊதிய மாற்றம், 4G & 5G மற்றும் புதிய பதவி உயரவு கொள்கை ஆகியவற்றின் தீர்விற்காக, பெருந்திரளாக ஊழியர்களை திரட்டுவதன் ஒரு பகுதியாக, 14.06.2023 அன்று ஆளுனர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட JOINT FORUM அறைகூவல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாநில சங்கங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் மாநில செயலர்கள், கீழ்கண்ட விஷயங்களை குறித்துக் கொள்ள வேண்டுமென மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது:-

1. ஒரு சில மாநிலங்களில், கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட அனுமதி கிடைக்காமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில், முன்கூட்டியே, காவல் துறையினரிடம் விவாதித்து, மாற்று வழிகளில் செல்ல அனுமதி வாங்கிட வேண்டும்.

2. இந்த இயக்கத்தில், பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களையும், ஓய்வூதியர்களையும் திரட்ட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

3. நமது கோரிக்கைகள், பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், கோரிக்கை அட்டை மற்றும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

4. இந்த இயக்கம் மீடியாக்களில் வருவதை, பொருத்தமான முறையில் உறுதி செய்திட வேண்டும்.

5. JOINT FORUMத்தின் அமைப்பாளர்கள் என்ற முறையில், கவர்னர் மாளிகை நோக்கிய பேரணி வெற்றிகரமாக நடைபெற, BSNL ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர்கள், அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தோழர் P. அபிமன்யு 

அகில இந்திய JOINT FORUM முடிவின் அடிப்படையில், 14.06.2023 அன்று அனைத்து மாநில தலைநகர்களிலும், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு வழங்கும் இயக்கம் நடத்த வேண்டும். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநில JOINT FORUM சார்பாக தமிழக ஆளுநர் அவர்களை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த, சென்னை காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. காவல் துறையும், 14.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் 1 மணி வரை சென்னை சிந்தாதிரி பேட்டை பாலத்தில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்த, அனுமதி வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.

எனவே, மதுரை மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் ஊழியர்கள், 14.06.2023 ஆளுநர் மாளிகை நோக்கிய பேரணியில், குறித்த நேரத்தில், பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

வாழ்த்துக்களுடன்,
 P.ராஜு 
மாநில செயலாளர்


மத்திய மாநில சங்க அறைகூவல்படி, நமது சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, பெருமளவு தோழர்களை திரட்டி, சென்னை பேரணிக்கு அழைத்து செல்லுமாறு கிளைகளை, மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்