Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 2, 2023

வெற்றிகரமாக நடைபெற்ற மனித சங்கிலி இயக்கம்

 


NON EXECUTIVE ஊழியர் சங்கங்களை உள்ளடைக்கிய, JOINT FORUM கூட்டமைப்பு, மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான உடனடி தீர்வு, கால தாமதமின்றி, BSNLன் 4G மற்றும் 5G சேவைகளை துவங்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்ட இயக்கங்களை அறிவித்தது. முதல் கட்ட போராட்டமாக, நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், 01.06.2023 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டது. 

அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, 01.06.2023 அன்று சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரில், மனித சங்கிலி இயக்கமும், பின் மெயின் தொலைபேசி நிலையத்தில், கோரிக்கை விளக்க கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர்