தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின், 7வது கிளை மாநாடு, ஆத்தூரில், 31.05.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் M. லக்ஷ்மணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் முதல் நிகழ்வாக சங்க கொடியை தோழர் L. செல்வராஜூ மாவட்ட உதவி தலைவர் ஏற்றி வைக்க, அஞ்சலி தீர்மானத்தை தோழர் A. அருள்மணி, கிளை உதவி செயலர், முன்மொழிந்தார். தோழர் R. சதீஷ், கிளை செயலர் வரவேற்புரை வழங்கினார்.
மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் M. செல்வம் மாவட்ட செயலர், துவக்கவுரை வழங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட உதவி தலைவர், AIBDPA, தோழர் P. செல்வம், மாவட்ட உதவி தலைவர், தோழர் G. R. வேல்விஜய், மாவட்ட உதவி செயலர், BSNLEU, தோழர் V. சின்னசாமி, மாவட்ட உதவி தலைவர், AIBDPA, தோழர் N. மூர்த்தி, கிளை செயலர், AIBDPA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் கிளை செயலர் செயல்பட்டு அறிக்கையை தாக்கல் செய்தார். கிளை பொருளாளர் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. சார்பாளர் விவாதத்திற்கு பின், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி, தோழர் L. செல்வராஜூ, கிளை தலைவராகவும், தோழர் A. சிவன்தன் கிளை செயலராகவும், தோழர் M. லக்ஷ்மணன் பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் மாநாட்டு பேருரை வழங்கினார். தீர்மானங்கள் நிறைவேற்றியபின், தோழர் S. K. சுப்பிரமணியன் நன்றி கூற, மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட BSNLEU, TNTCWU சங்கங்கள் சார்பாக தோழமை வாழ்த்துக்கள்.