16.10.2022 அன்று JE இலாகா தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த தேர்வு எழுதுவதற்கான CUT-OFF தேதியை, ஜூலை 1 என மாற்ற வேண்டும் என பல தோழர்கள், மத்திய சங்கத்தை கோரினர்.
இந்த பிரச்சனை தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, 11.07.2022 அன்று திரு சௌரப் தியாகி PGN(Estt) அவர்களிடம் விவாதித்தார். இலாகா தேர்வுகளுக்கான CUT OFF தேதியை, VACANCY வருடத்தின் ஜனவரி 1ஆம் தேதியென்று, DoP&T, 08.05.2017 அன்று வெளியிட்ட கடித எண்.22011/4/2013-Estt(D) மூலம் மாற்றியுள்ளது என அவர் பதிலளித்தார்.
எனவே, அந்த உத்தரவின் படி, JE இலாகா தேர்விற்கான CUT OFF தேதி என்பது ஜனவரி ஒன்றுதான்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்
DoP&T உத்தரவு காண இங்கே சொடுக்கவும்