Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 25, 2022

ஒப்பந்த ஊழியர்களுக்காக கோரிக்கை பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம்


27.06.2022, திங்க
ட்கிழமை, மதியம் 12 மணி அளவில், சேலம் GM அலுவலகம் 


ஒப்பந்த ஊழியர் மத்திய கூட்டமைப்பான, BSNLCCWF, நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக, மூன்று கட்ட போராட்ட இயக்கங்களை, 2022 ஜூன் மாதத்தில் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனே வழங்கிடு, அவுட்சோர்சிங் திட்டத்தை (WORK CONTRACT) மறு பரிசீலனை செய், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF,  ESI, MINIMIMUM WAGES,  GRATUITY போன்ற அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் அமுல்படுத்தும் விதத்தில் டெண்டர்களை வெளியிடு ஆகிய கோரிக்கைகளுக்காக, இரண்டாம் கட்ட போராட்டமாக, 27.06.2022 அன்று, நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், கோரிக்கை பதாகை ஏந்திய  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, நமது மாவட்டத்தில், BSNLEU - TNTCWU - AIBDPA  ஒருங்கிணைப்பு குழு சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், 27.06.2022 அன்று, நண்பகல் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். BSNLEU - TNTCWU - AIBDPA  மூன்று சங்க சார்பு தோழர்களும் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,  
கன்வீனர், ஒருங்கிணைப்பு குழு