Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 16, 2022

ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவுகள்


BSNLEU - AIBDPA - BSNLCCWF மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவின் அடிப்படையில், தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து  கையெழுத்து இயக்கம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தை, நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், 15.02.2022 அன்று, கேட்பொலிக் கலந்துரையாடல் (AUDIO CONFERENCE) வாயிலாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு தோழர் M. மதியழகன், (DP AIBDPA) தலைமை தாங்கினார். கூட்டத்தின் நோக்கங்களை,  ஆய்படு பொருளை விளக்கி, தோழர் E. கோபால், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கவுரை வழங்கினார். குழுவின் உறுப்பினர்கள் தோழர்கள் S. தமிழ்மணி, (DS AIBDPA) S. ஹரிஹரன், (DP BSNLEU) K. ராஜன், (DP TNTCWU), M.  செல்வம், (DS TNTCWU) ஆகியோர் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதங்களுக்கு பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டடன.

1.18.02.2022 அன்று, நகர கிளைகள் சார்பாக, சேலம் GM அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தை துவக்குவது, 

2. அதே வேளையில்,  ஊரக கிளைகளில், அந்தந்த பகுதிகளில் உள்ள மூன்று சங்க மாவட்ட நிர்வாகிகளை பயன்படுத்தி கையெழுத்து இயக்கத்தை துவங்குவது. 

3. பணியில் உள்ள BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என தங்கள் பகுதியுள்ள அனைவரையும் சந்தித்து, (NATIONAL MONETISATION PIPELINE), தேசிய பணமாக்கல் திட்டத்தால், தேசத்திற்கும், BSNL நிறுவனத்திற்கும், ஏற்பட உள்ள பாதிப்புகளை விளக்கி, மகஜரில் கையொப்பம் பெற வேண்டும்.

4.  ஐந்து தினங்களுக்குள் இந்த பணி முடிக்கப்பட்டு, மாவட்ட சங்கத்திற்கு, 23.02.2022க்குள் வந்து சேரும் வகையில் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டும்.

பாரத  பிரதமருக்கு அனுப்பவேண்டிய மகஜர் ஆங்கிலத்தில் இருக்கும். அதன் உள்ளடக்கத்தை தமிழாக்கம் செய்து இணைத்துள்ளோம். தேவை அடிப்படையில் நகல் எடுத்து, ஊழியர்களுக்கு வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். படங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கவும்.

தோழமையுடன் 
E. கோபால், 
ஒருங்கிணைப்பாளர்