18.02.2022, வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி அளவில், சேலம் GM அலுவலகம்
BSNLEU - TNTCWU சங்கங்களின் இணைந்த மாவட்ட மைய கூட்டம், 15.02.2022 அன்று , கேட்பொலிக் கலந்துரையாடல் (AUDIO CONFERENCE) வாயிலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் K.ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU தலைமை தாங்கினார்.
நமது BSNLEU - TNTCWU சங்கங்களின் கடுமையான முயற்சியின் பலனாக, சேலம் மாவட்ட INFRA ஒப்பந்ததாரருக்கு, சுமார் 52 லட்சம் நிதி வந்தும், நமது ஊழியர்களுக்கு ஒரு பைசா கூட ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நமது அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய, BSNLEU - TNTCWU சங்கங்களின், சேலம் மாவட்ட இணைந்த மைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், மையத்தின் கன்வீனர் விளக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் ஒப்பந்த ஊழியரின் இதர பிரச்சனைகளையும், INFRA பகுதி தோழர்களின் தற்போதைய நிலவரத்தையும் விளக்கி விளக்கவுரை வழங்கினார்கள்.
தோழர் S. தமிழ்மணி, BSNLEU மாநில உதவி தலைவர், தோழர் M. சண்முகம், BSNLEU மாவட்ட பொருளர், தோழர் C. பாஸ்கர், TNTCWU மாநில உதவி செயலர் ஆகியோர் விவாதத்தில் பங்குபெற்றனர்.
விவாதங்களுக்கு பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டடன.
1. 18.02.2022 அன்று சேலம் GM அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, காலை 10.30 மணி அளவில் சக்திமிக்க கோரிக்கை முழக்கம் எழுப்புவது.
2. ஆர்ப்பாட்டத்திற்கு பின், மாவட்ட நிர்வாகத்தை சந்திப்பது.
3. இயக்கத்தில் BSNLEU - TNTCWU சங்கங்களின், மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் முழுமையாக கலந்து கொள்வது.
4. CLUSTER முறையிலான, கேபிள் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களின், ஊதிய ஏற்ற தாழ்வுகள், சமூக பாதுகாப்பு சலுகைகள், ஊதிய நிலுவை உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகத்துடன் விவாதிப்பது.
5. HOUSE KEEPING பகுதி தோழர்களின் பிரச்சனைகளையும் நிர்வாகத்துடன் விவாதிப்பது.
அநீதி கண்டு வெகுண்டெழுந்து, ஆர்ப்பரித்து போராட,18.02.2022 அன்று காலையில் சேலம் GM அலுவலகத்தில் திரளாக கூடுவோம்.
ஆர்ப்பரித்து போராடுவோம்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம்!!